tamilnadu

அடிக்க வேண்டாம் சுட்டு விடுங்கள் ... 1ஆம் பக்கத் தொடர்ச்சி

அப்படி யாரையும் தெரியாது என்று பாதுகாப்பு வீரர்களிடம் கூறியபோது, அவர்கள் தன் முகக்கண்ணாடி, ஆடைகள் மற்றும் காலணிகளை அகற்ற உத்தரவிட்டதாக, அந்நபர் தெரிவித்தார்.“நான் என் ஆடைகளை களைந்தபோது, கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல்லத்தியாலும், கம்பிகளாலும், சுமார் இரண்டு மணி நேரம் என்னை அடித்தார்கள்.நான் மயங்கி விழுந்த போதெல்லாம், மின்சார அதிர்ச்சி கொடுத்து என்னை எழுப்பினார்கள்”“அதனை மீண்டும் எனக்கு செய்தால், நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தேன். நான் துப்பாக்கியை எடுத்திருப்பேன். என்னால் இதை தினமும் தாங்கிக் கொள்ள முடியாது.”பாதுகாப்புப் படைக்கு எதிரான போராட்டங்களில் யாரேனும் ஈடுபட்டால், இதே மாதிரியான விளைவுகளை சந்திக்கவேண்டி இருக்கும் என்று கிராமத்தில் இருக்கும் அனைவரிடமும் தெரிவிக்குமாறு அந்த வீரர்கள் கூறியதாக அந்த இளம் நபர் கூறினார்.எல்லா கிராமங்களில் இருந்த ஆண்கள் அனைவரிடமும் நாங்கள் பேசியபோது, கிராமவாசிகள் போராடக் கூடாது என்ற அச்சத்தை ஏற்படுத்தவே பாதுகாப்புப்படையினர் இவ்வாறு செய்ததாக அவர்கள் நம்புகின்றனர்.

இந்திய ராணுவம் பிபிசியிடம் பேசுகையில், “பொதுமக்கள் யாரையும் நாங்கள்மோசமாக கையாளவில்லை” என்று கூறுகிறது.“இதுபோன்ற எந்த குறிப்பான குற்றச்சாட்டுகளும், எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை. பகைமை உணர்வுகள் உடையவர்களால் இந்தக் குற்றச்சாட்டுகள் தூண்டப்பட்டிருக்கலாம்” என ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் தெரிவித்தார்.

;